கேளாய் பெண்ணே!

பெண்ணே!
உன் உள்ளத்தைப் பற்றிக்கொண்டு
முகத்தில் நீ அணிய புன்-நகையும் தந்து
பற்றிய கையை விட்டு விலகி
உன்னை பிரிவதற்காகவே பிறவி எடுத்த
இந்த ஏழைக் காதலனின் மனதைக் கேளாய்!

என்னைப் பிரிந்து வாடி நீ படும் பாட்டை
நான் அறியேன் என்று நினைத்தாயோ?
உன் மனதைப் பாலைவனமாக்கிய
பாவியை மன்னிப்பாயோ?

உன் ஆனந்தக் கனவுகளுக்குப் பாத்திரமானவன்
உன் கண்ணீர் வெள்ளத்திற்குக் காரணம் ஆனேன்
என்று எண்ணும் ஒவ்வொறு கணமும்
நரகத்தில் நான் கழிக்கும் யுகமாகத் தோன்றுதம்மா!

உன் கண்ணீரைத் துடைக்க இயலவில்லை
உன் கோபத்தைத் தணிக்க வழியொன்றில்லை
மீண்டும் கண்டு காதலித்து உன்னை மணக்க- மறு
பிறவியும் என்னிடம் இல்லை!

எனினும் ஒரு சொல் கேளாய்!
நான் உன்னிடம் கொண்ட காதலைப் பொய்யெனக் கொள்வது
பக்ஷிகள் இசையிடம் கொண்ட காதலையும்
மழைநீர் மண்ணிடம் கொண்ட காதலையும்
ஆகாயம் நிலவிடம் கொண்ட காதலையும்
பொய்யெனக் கொள்வதாகும்.

என் மனதை ஆளும் என் செல்வமே!
அலைபாயும் மனதில் அமைதி காண்
என் மனம் என்றும் உனக்கு சமர்ப்பணம்!

—————————————————————–

நிறைவேறாத காதலை எண்ணி தன்னைப் பிரிந்து வாடும் தன் காதலிக்கு காதலன் கூறும் கூற்றாய் கற்பனை செய்து தமிழில் எழுத முயற்சித்த முதல் கவிதை. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். பிடித்திருந்தால் ரசிக்கவும் 🙂

Advertisements
Tagged , ,

2 thoughts on “கேளாய் பெண்ணே!

  1. rajendranunnikrishnan says:

    நல்ல கவிதை.. வாழ்த்துகள்..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Advertisements